அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை: அமைச்சர்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு நிகரானவர்கள் அதிமுகவில் யாரும் இல்லை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை: அமைச்சர்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு நிகரானவர்கள் அதிமுகவில் யாரும் இல்லை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற ஆகஸ்ட் 9}ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசிதாவது:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள், பதாகைகள் வைக்க வேண்டும். பதாகைகளில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., கட்சியை வளர்த்த ஜெயலலிதா ஆகியோரின் படங்களை மட்டுமே பெரிதாக போட வேண்டும். ஏனென்றால், கட்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது. நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. கட்சியினர் யாரும் கவலை அடைய வேண்டும். என்னால் முடிந்ததை உங்ளுக்குச் செய்வேன். நம்பியவர்கள் யாரையும் அதிமுக கைவிடாது. நூற்றாண்டு விழாவில் பஞ்சாயத்து முதல் நகரம் வரை உள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கட்சியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்றார்.

அமைச்சர் பேட்டி: பின்னர், அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரறிவாளனைபரோலில் விடுவிப்பது தொடர்பாக அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசித்து விரைவில் நல்ல பதில் அளிக்கும். சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சிகளுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறுவது தவறு. எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக முறைப்படி அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார் அவர்.

அப்போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பதாகைகளில் சசிகலா புகைப்படம் இடம்பெறுமா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கட்சியை நிறுவியவர் எம்.ஜி.ஆர்., கட்சியை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தற்போதைய முதல்வர் பழனிசாமி.

நீங்கள் குறிப்பிடுபவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கி இருப்பதாக அவர்களே கூறிவிட்டனர். எனவே, இந்நிகழ்வுக்கும் உங்கள் கேள்விக்கும் சம்பந்தமில்லை. இதில், கருத்துச் சொல்லவும் எதுவும் இல்லை என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com