நடிகர் கமலுக்கு அரசியல் தெரியாது: முதல்வர் பழனிசாமி பேட்டி
நடிகர் கமலுக்கு அரசியல் தெரியாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் பேட்டியளித்துள்ளார்.


சென்னை: நடிகர் கமலுக்கு அரசியல் தெரியாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அங்கு மலர் அஞ்சலிசெலுத்தினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் கூறியதாவது:
பொதுமக்களுக்கு பலன் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றி இருக்கிறோம். அதே போல அனைவரும் பாராட்டும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவோம்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான நமது எம்ஜிஆரின் செயல்பட்டுகளில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. இன்று கூட எனது புகைப்படம் அதில் வெளிவந்துள்ளது.
இறுதியாக நடிகர் கமல்ஹாசனின் அரசியல் ரீதியிலான கருத்துக்களை பற்றிய கேள்விக்கு, ‘அவர் சிறந்த நடிகர்; ஆனால் அவருக்கு அரசியல் தெரியாது' என்று முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...