கலாம் நினைவு தின அமைதிப் பேரணி: விராலிமலையில் இன்று நடைபெற்றது
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தின அமைதி ஊர்வலம், விராலிமலையில் இன்று நடைபெற்றது.


முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தின அமைதி ஊர்வலம், விராலிமலையில் இன்று நடைபெற்றது.
தினமணி நாளிதழும், விராலிமலை விவேகா மெட்ரிக்பள்ளியும் இணைந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல் கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விராலிமலையில் வியாழக்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
விராலிமலை காமராஜர் நகர் முன்பிருந்து காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கி, கடைவீதி, சோதனைச்சாவடி, வடக்குரத வீதி வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
இந்த ஊர்வலத்தை, முன்னாள் அரசு பள்ளி தலைமையசிரியர் புலவர் ச. சந்தானமூர்த்தி தொடங்கிவைத்தார். இதில் விராலிமலை விவேகா பள்ளித்தாளாளர் வெல்கம்மோகன், இயக்குநர் எம். அருண்பிரசாத், காவல் உதவி ஆய்வாளர் இசைவாணி உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...