/

சென்னை புத்தகத் திருவிழா: இதுவரை 2 லட்சம் புத்தகங்கள் விற்பனை

சென்னை புத்தக திருவிழாவில் இதுவரை 2 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனையாளர்கள் குழுமத்தின் அறங்காவலர் சண்முகம் கூறினார்.

News image
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ராமானுஜர் 1000 என்ற தலைப்பில் பேசிய சொற்பொழிவாளர் வெங்கட்ஜி.
Updated On :29 ஜனவரி 2024, 4:32 pm

DIN

சென்னை புத்தக திருவிழாவில் இதுவரை 2 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனையாளர்கள் குழுமத்தின் அறங்காவலர் சண்முகம் கூறினார்.
தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனையாளர்கள் குழுமம் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக திருவிழா கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் புத்தக கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பல பதிப்பகங்களின் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளைக் கொண்ட நூல்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் புதுவரவாக விளக்கவுரையுடன் கூடிய பாரதியார் கவிதைகள், நீதிநூல் திரட்டு, திருக்குறள் திரட்டு மற்றும் ஆய்வு நூல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியம், சிறுவர் சிறுமியர்களுக்கான காமிக்ஸ் புத்தகம், சிறுகதைகள், வரலாற்று நாவல்கள், ஆய்வு நூல்களையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
60,000 பேர் வருகை: இதுவரையில் புத்தகத் திருவிழாவை 60 ஆயிரம் பேர் பார்வையிட்டு பலன் அடைந்துள்ளனர்.
இதன் மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சி மூலம் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சண்முகம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.