அதிமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது: தினகரன் பேட்டி

பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவைத் தவிர வேறு யாரும் தம்மை அதிமுகவில் இருந்து நீக்க முடியாது என்றும் சென்னை திரும்பியதும் தான்
அதிமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது: தினகரன் பேட்டி

புதுதில்லி: பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவைத் தவிர வேறு யாரும் தம்மை அதிமுகவில் இருந்து நீக்க முடியாது என்றும் சென்னை திரும்பியதும் தான் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும்  தில்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 37 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியில் வந்த தினகரன் சென்னை திரும்புவதற்காக தில்லி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் கட்சிப் பணிகளை தொடரப்போவதாக தெரிவித்தார்.

சிறையில் இருந்தபோது தமிழகத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கிறேன். என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு என்ற தினகரன், சென்னை சென்று மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசுக்கு பணிந்து தமிழக அரசு செயல்பட வாய்ப்பில்லை என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com