தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் அமைச்சர்கள் 'திடீர்' ஆலோசனை!
மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில்...


சென்னை: மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில், பத்துக்கும் மேற்பட்ட தமிழக அமைச்சர்கள் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் முயற்சியில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், நேற்று முன்தினம் தில்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியானர்.
இன்று அவர் பெங்களூரு சிறையில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க சென்றுள்ளார்.மேலும் மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ராஜலக்ஷ்மி, வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜு, மணிகண்டன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், சரோஜா, சம்பத். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...