தினகரன்-எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பால் ஆட்சிக்கு ஆபத்தில்லை: டி.ஜெயக்குமார்
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசியது ஆட்சிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.


அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசியது ஆட்சிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து தலைமைச் செயலகத்துக்கு வெளியே அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறம்பட வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார். எட்டு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்துப் பேசி, கருத்துகளைப் பெற்றுள்ளார்.
தொகுதிகளில் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். எட்டு மாவட்ட எம்.எல்.ஏ.,க்களை செவ்வாய்க்கிழமை அவர் சந்தித்துப் பேசியுள்ளார் என்றார் ஜெயக்குமார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
கேள்வி: டிடிவி தினகரனை 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்?
பதில்: இந்தச் சந்திப்புகளால் அரசுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. 2021-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி தொடரும். மீண்டும் மக்களைச் சந்தித்து 2021-க்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியே தொடரும்.
கேள்வி: அரசுக்கு பெரும்பான்மை இருக்கும் சூழலில், எம்.எல்.ஏ.,க்கள் ஏன் தனியாக அவரைச் சந்திக்க வேண்டும்?
பதில்: தனிப்பட்ட முறையில் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்திருப்பார்கள். அதனை அரசியலாக்கக் கூடாது. நிலையான ஆட்சி நடைபெறுகிறது. அந்த சந்திப்புக்கும், ஆட்சிக்கும் தொடர்பில்லை.
கேள்வி: கட்சிப் பொறுப்பில் இருந்து தினகரனை விலக்குவது என்றால், கட்சியை யார் வழிநடத்துவார்கள்?
பதில்: ஏற்கெனவே நாங்கள் குறிப்பிட்டவாறு கட்சியில் வழிகாட்டும் குழு இருக்கிறது. அந்தக் குழுவின் அடிப்படையில் கட்சி வழிநடத்தப்படுகிறது. ஆட்சியைப் பொருத்தவரை இன்றைக்கு அரசை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழி நடத்துகிறார். இந்த அரசில் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுகிறது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...