/

இரு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே விருப்பம்: அமைச்சர் ஜெயக்குமார்

இரு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:44 pm

DIN

சென்னை: இரு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே திருவேற்காடு வேலப்பன்சாவடியில் அ.தி.மு.க. புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரு அணிகளின் இணைப்புக்காக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது. இனிமேல் எடப்பாடி பழினிச்சாமி அணியுடன் இணைப்பும் கிடையாது என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 66 அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறுவணிகர்கள், உற்பத்தியாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார். வரும் பேரவை கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக இரு அணிகளின் இணைப்புக்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவை ஓபிஎஸ் ஏன் கலைத்தார் என்று தெரியவில்லை.

அதிமுகவின் நலன் கருதி இரு அணிகளும் இணைய வேண்டும். இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்த சென்ற சகோதரர்கள் மீண்டும் வந்துசேர வேண்டும்.

இரு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.