/

ஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி அதிரடி தாக்கு

ஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம் என்று தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளருமான

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:44 pm

DIN

சென்னை: ஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம் என்று தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளருமான புகழேந்தி தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறுகையில், ஓபிஎஸ் அணி என்பது முடிந்துபோன முதியோர் இல்லம். அந்த அணியில் இருப்பவர் நினைவாற்றலை இழந்து உள்ளதால் இனி அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.

சட்டப்பேரவையில் தனது மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று சவால் விட்ட ஓபிஎஸ், இதுவரை எதையும் செய்யமுடியாமல் இருந்து வருகிறார்.

அவர் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றபோது இருந்த 12 எம்.எல்.ஏ.க்களை தவிர வேறு யாரும் அவருடன் செல்லவில்லை. அவர்களின் முகத்தை பார்த்தலே தெரியும் முடிந்துபோன முதியோர் என்பது என்றார்.

மேலும், தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை என்பதால் தொடர்ந்து எதையாதவது உளறிகொண்டே இருக்கிறார் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.