ராஜேந்திர பாலாஜி எதற்காக தூக்கில் தொங்குவேன் என்றார்? இன்று இதுவும் சர்ச்சைதாங்க!
தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதற்காக தூக்கில் தொங்குவேன் என்று சொன்னார் என்பது குறித்த சர்ச்சை ஊடகங்களில் சக்கைப் போடு போடுகிறது.


சென்னை: தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதற்காக தூக்கில் தொங்குவேன் என்று சொன்னார் என்பது குறித்த சர்ச்சை ஊடகங்களில் சக்கைப் போடு போடுகிறது.
அதாவது, கடந்த மே 27ம் தேதி சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் இல்லை என்பதை நிரூபித்துவிட்டால் நான் தூக்கில் தொங்கத் தயார் என்று கூறினார். இது அன்றைய தினம் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது.
அன்று முதல் இன்று வரை பால் கலப்படம் என்பது வெறும் குற்றச்சாட்டுகளாகவும் புகார்களாகவுமே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், பாலில் கலப்படம் செய்யப்படுகிறது என்று சொல்லும் அமைச்சர், தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும் சொல்கிறாரே? என்ற கேள்வியை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், முதலில், ”பாலில் கலப்படம் செய்வதை நிரூபிக்கவில்லை என்றால் நான் ராஜினாமா செய்வேன்”, என்றார். அதையும் தாண்டி, “தூக்கு கயிற்றில் தொங்குவேன், தற்கொலை செய்வேன்”, என்றெல்லாம் அமைச்சர் சொன்னார். ஆனால், இன்றைக்கு வருகின்ற செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, அவர் ராஜினாமா செய்யப்போகிறாரா? அல்லது அவரே சொன்னபடி தூக்கில் தொங்கப் போகிறாரா? தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரா? என்று மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலின் கருத்து குறித்து செய்தியாளர்கள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, அவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். தனியார் நிறுவனங்கள் எங்கள் பாலில் கலப்படம் இருப்பதை நிரூபிக்கச் சொல்லுங்கள் என்றும், எங்களிடம் பணம் வாங்குவதற்காகத்தான் அவர் இப்படி சொல்கிறார் என்றும் கூறினார்கள்.
அதற்கு, நான், தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் வாங்கியதை நிரூபித்தால், தூக்கில் தொங்குவேன் என்று சொன்னேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதனால், பாலில் கலப்படம் என்பது ஒரு பெரிய சர்ச்சையாக இருந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதற்காக தூக்கில் தொங்குவேன் என்று சொன்னார் என்பதே புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
27-5-2017 அன்றைய செய்தி : தூக்கில் தொங்கத் தயார் -ராஜேந்திர பாலாஜி சவால்
சிவகாசி: தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் இல்லை என்பதை நிரூபித்துவிட்டால் நான் தூக்கில் தொங்கத் தயார் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பாலில் ரசாயனம் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலில், 'அவ்வாறு பேசியவர் யார், ஒரு தனியார் பால் நிறுவனத்தின் முகவர். நான் சொன்ன கருத்தால் அவருக்கு வரும் கமிஷன் குறைகிறது. அந்த வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.
தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதை என்னால் நிரூபிக்க முடியும். ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு அவர்கள் நிரூபித்துவிட்டால் நான் என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அவ்வளவு ஏன் தூக்கில் தொங்கத் தயார்' என்று கூறியுள்ளார்.
29.6.2017 - நேற்றைய செய்தி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்...
கேள்வி: பாலில் கலப்படம் செய்யப்படுகிறது என்று சொல்லும் அமைச்சர், தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும் சொல்கிறாரே?
பதில்: முதலில், ”பாலில் கலப்படம் செய்வதை நிரூபிக்கவில்லை என்றால் நான் ராஜினாமா செய்வேன்”, என்றார். அதையும் தாண்டி, “தூக்கு கயிற்றில் தொங்குவேன், தற்கொலை செய்வேன்”, என்றெல்லாம் அமைச்சர் சொன்னார். ஆனால், இன்றைக்கு வருகின்ற செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, அவர் ராஜினாமா செய்யப்போகிறாரா? அல்லது அவரே சொன்னபடி தூக்கில் தொங்கப் போகிறாரா? தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரா? என்று மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கேள்வி: பாலில் கலப்படம் நடப்பதாக இப்போது தெரிவிக்கும் அமைச்சர், கடந்த 5 ஆண்டுகாலமாக நடந்த அதிமுக ஆட்சியில் இதை ஏன் கண்டு கொள்ளாமல் இருந்தாரே?
பதில்: அப்போது அவருக்கு வர வேண்டியதெல்லாம் முறையாக வந்து சேர்ந்திருக்கும். இப்போது அதெல்லாம் வராத காரணத்தால், இந்தப் பிரச்னையை ஒருவேளை கிளப்பி இருக்கலாம் என்று கூறினார்.
இதையடுத்தே ராஜேந்திர பாலாஜி தனது புதிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...