/

இன்று முதல் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்

அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை (மே 5) முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:26 pm

DIN

அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை (மே 5) முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்காக இரண்டு அணிகளின் சார்பிலும் தலா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், ஓபிஸ் அணியினர் விதித்த 2 நிபந்தனைகளின் காரணமாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஓபிஎஸ் ஆதரவாளர்களின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்க உள்ளார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வா.மைத்ரேயன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்துக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டமாக செல்ல உள்ள ஓ.பன்னீர்செல்வம் மே மாத இறுதியில் தென்சென்னையில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.