இரு அணிகள் இணைப்புக்கு இரு அமைச்சர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர்

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிக்கு அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முட்டுகட்டையாக உள்ளனர் என
இரு அணிகள் இணைப்புக்கு இரு அமைச்சர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர்

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிக்கு அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முட்டுகட்டையாக உள்ளனர் என அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைய வேண்டுமென்றால், எங்களின் இரண்டு கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் போனபோது ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். இதனை விரும்பாத சசிகலா குடும்பத்தினர் அவரை நிர்பந்தப்படுத்தி, முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வைத்தனர். தற்போது சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்வராக உள்ளார்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிக்கு அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முட்டுக்கட்டையாக உள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உழைப்பால் உருவான அதிமுக ஆட்சி, தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதா எண்ணப்படி தமிழகத்தில் ஆட்சி நடந்தால், நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மாறாக, சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். தற்போது சசிகலா அணியில் உள்ள எம்எல்ஏ-க்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, ஆட்சி கலைந்து விடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com