மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என பயப்படுகிறார்கள்: ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்று ஆட்சியாளர்கள் அச்சம் கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
Updated On :16 மே 2017, 6:54 am

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்று ஆட்சியாளர்கள் அச்சம் கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், உடனடியாக தமிழக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும். விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தமிழக சட்டப் பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்று ஆட்சியாளர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சிதம்பரம் வீட்டில் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிபிஐ தெரிவித்த புகாரை சிதம்பரம் சட்ட ரீதியாக சந்திப்பார் என்று பதிலளித்தார் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.