இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது

News image
Updated On :2 நவம்பர் 2017, 9:55 pm

DIN

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், நெய்வேலியில் மத்திய துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையர் சீனிவாஸ், புதுச்சேரி உதவி தொழிலாளர் நல ஆணையர் கணேசன், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை விருந்தினர் இல்லத்தில் வியாழக்கிழமை இரவு நடந்தது. 
பேச்சுவார்த்தையில் முதன்மை தொழிலாளர் நல ஆணையர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முற்றுகைப் போராட்டம் 10 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.