ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை (நவ.16) பவுனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.22,472-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.14 குறைந்து, ரூ.2,809-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.42.80 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.42,800-ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை நிலவரம்
(ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,809
1 பவுன் தங்கம் 22,472
1 கிராம் வெள்ளி 42.80
1 கிலோ வெள்ளி 42,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.