இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பாசனத்துக்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு

அணைகள், நீர்த்தேக்கங்களில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

News image
Updated On :16 நவம்பர் 2017, 11:40 pm

DIN

அணைகள், நீர்த்தேக்கங்களில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (நவ. 17) முதல் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், 1744.55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு பாசனத்துக்காக சனிக்கிழமை ( நவ. 18) முதல் நீர் திறந்து விடப்படும். இதனால், 6 ஆயிரத்து 168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பழனி வட்டம் வரதமாநதி அணையில் இருந்து ஆயக்குடி பாப்பன் வாய்க்கால், பெரிய வாய்க்கால் மற்றும் பழனி வாய்க்கால்களில் சனிக்கிழமை (நவ.18) நீர் திறந்து விடப்படும். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,545 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.