புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழகத்தில் சாரல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 7:09 pm

DIN

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக் காலம் நிறைவு பெறும் சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழை குறையத் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் மட்டும் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில லேசான சாரல் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை, வானம் பகுதி மேகமூட்டத்துடன் இருக்கும். மழைக்கு வாய்ப்பில்லை. தென்மேற்கு பருவமழைக்காலம் அக்டோபர் 26 -ஆம் தேதிக்கு மேல் 29 -ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.