அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் நீக்கும் வரை ஓயமாட்டோம்: டிடிவி தினகரன்

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் நீக்கும் வரை ஓயமாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:50 pm

DIN

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் நீக்கும் வரை ஓயமாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் 3 எம்எல்ஏக்கள், 7 எம்பிக்களும் சென்றிருந்தனர். 

இந்த சந்திப்புக்குப் பின் செய்தியளார்களிடம் பேசிய தினகரன், 
முதல்வரை மாற்றக் கோரி ஆகஸ்ட் 22ல் தந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். தமிழக அரசியல் சூழலை கவனிப்பதாகவும், விரையில் முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார். 

மிரட்டல் குதிரை பேரங்களுக்கு ஒருசிலர் மாறலாம். ஒருவர் அணி மாறிய நிலையில் 3 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஜக்கையன் அணி மாறியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தலைமை நிலையச் செயலாளர் பதவியை என்னிடம் கோரினார் ஜக்கையன். நியாயம் யார் பக்கம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். முதல்வர் கூட்டிய கூட்டத்துக்கு போதிய எம்எல்ஏக்கள் வரவில்லை. 

பெரும்பான்மை இல்லை என்பதை அவர்கள் கூட்டிய கூட்டம் தெளிவுப்படுத்தியது. ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் விரைவில் வெளியே வருவார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் நீக்கும் வரை ஓயமாட்டோம். துரோக முதல்வரின் துரோக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது. அணியில் சேர எம்எல்ஏக்கள் மிரட்டப்படுவது குறித்தும் தெரியப்படுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.