ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தமிழக மக்களின் மனசாட்சிக்கு எதிரான நடவடிக்கை: தமிமுன் அன்சாரி

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, தமிழக மக்களின் மனசாட்சிக்கு எதிரான நடவடிக்கை என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம். தமிமுன

News image
Updated On :19 செப்டம்பர் 2017, 2:20 am IST

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, தமிழக மக்களின் மனசாட்சிக்கு எதிரான நடவடிக்கை என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக இரண்டு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு நிலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை, சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும், உள்கட்சி பிரச்னை காரணமாக முதல்வருக்கு எதிராக செயல்பட்டனரே தவிர, அவர்கள் கட்சி மாறவில்லை என்பதை சட்டப்பேரவைத் தலைவர் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப். 20-ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் பொறுமை காத்திராமல், 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கும், மக்கள் மனசாட்சிக்கும் எதிரானது. இதற்கு நீதிமன்றம் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.