டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஐபிஎல் போட்டிகளுக்கு குரல் கொடுக்கும் 'அந்த' 100 பேர்: ரூ. 1.7 லட்சம் ஊதியத்துடன் ஒப்பந்தம்!

ஏப்ரல் 7-ஆம் தேதி 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக குரல் கொடுக்க 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 7:43 pm IST

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனவே அவர்கள் முடிந்தவரை அதிகளவிலான மக்களிடம் இப்போட்டித் தொடரை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தற்போது இதற்கென 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தியாவிலுள்ள பிற மொழிகளிலும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடத்தி வருகின்றன. எனவே ஐபிஎல் போட்டிகளை இதற்கான மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கும் விதமாக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் அடிப்படையில் இந்த ஒவ்வொரு மொழிக்கும் என்று பிரத்தியேகமான வர்ணனையாளர்களை ஸ்டார் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதில் அனுபவம் மட்டுமல்லாது புதுமையும் இடம்பெறுகிற வகையில் வர்ணனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இம்முறை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், சுனில் கவாஸ்கர் தவிர மற்றவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 1.7 லட்சம் ஊதியத்துடன் ஸ்டார் நிறுவனம் இவர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் உலகளவிலான ஒளிபரப்புக்கான ஆங்கில வர்ணனையாளர்களாக 17 பேரை நியமித்துள்ளது. இவர்களில் 8 பேர் இந்தியர்கள்.

மைக்கெல் வான், நாசர் ஹுசைன், டேவிட் லாய்ட் ஆகியோர் இந்த வர்ணனையாளர்கள் குழுவில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளனர். மெல் ஜோன்ஸ், அன்ஜும் சோப்ரா, இஷா குஹா, லிசா கார்ப்ரினி ஸ்தாலேகர் ஆகிய 4 பெண் வர்ணனையாளர்கள் இடம்பிடித்துள்ளனர். 

சுனில் கவாஸ்கர் (ஆங்கிலம், ஹிந்தி), முரளி கார்த்திக் (ஆங்கிலம், ஹிந்தி), லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் (ஆங்கிலம், தமிழ்) உள்ளிட்டோர் மட்டுமே இரு மொழிகளுக்கு வர்ணனையாளர்களாக இடம்பெற்றுள்ளனர். மேலும், சமகாலத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் அபினவ் முகுந்த் (தமிழ்), அபிஷேக் நாயர் (ஹிந்தி), அஷோக் டிண்டா (வங்காளம்), ஆர்.பி.சிங் (ஹிந்தி), இர்ஃபான் பதான் (ஹிந்தி), முகமது கைஃப் (ஹிந்தி), பிரக்யான் ஓஜா (ஹிந்தி) ஆகியோரும் இந்த வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.