சென்னையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிண்டி சிறுவர் பூங்கா வன உயிரினக் காப்பாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு உயிர்ப்பன்மை, பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சிற்றாமை இனங்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரைப் பகுதிகளில் முட்டையிடுகின்றன. கடந்த 2015-16, 2016-17 ஆண்டுகளில் 22,612 முட்டைகள் செயற்கை முறையில் பொறிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
கடந்த 2017-18-ஆம் ஆண்டில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட 15,988 கடல் ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன. மேலும், கடல் ஆமைகள், அதன் முட்டைகளைப் பாதுகாக்கும் விதமாக கடல் ஆமைகளை விலக்கும் கருவிகளை இழுவை வலைகளில் பொருத்த மீனவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

