நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காரில் கடத்திய அம்மன் சிலை பறிமுதல்: விரட்டிப் பிடித்த போலீஸார்

சென்னை அருகே காரில் கடத்திக் கொண்டு வந்த அம்மன் சிலையை ஐ.ஜி. தலைமையிலான போலீஸார் ஆட்டோவில் விரட்டிச் சென்று பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.

News image

சிலை கடத்தல் பிரிவு போலீஸாரால் போரூர் அருகே திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன்னாலான அம்மன் சிலை.

Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST


சென்னை அருகே காரில் கடத்திக் கொண்டு வந்த அம்மன் சிலையை ஐ.ஜி. தலைமையிலான போலீஸார் ஆட்டோவில் விரட்டிச் சென்று பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூரில் உள்ள ஒரு கோயிலில் இருந்து ஐம்பொன்னாலான அம்மன் சிலையைத் திருடி, காரில் போரூருக்குக் கடத்திக் கொண்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு திங்கள்கிழமை மாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். 
பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் 3 ஆட்டோக்களில் போரூர் காரப்பாக்கம் அருகே ஆற்காடு சாலையில் அந்த கும்பலை பிடிக்க நின்று கொண்டிருந்தனர். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு காரை, அவர்கள் வழிமறித்தனர். கார் நிற்காமல் சென்றதால் போலீஸார் ஆட்டோவில் விரட்டிச் சென்று, அந்தக் காரை வழிமறித்துப் பிடித்தனர். , அதிலிருந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட 2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலையை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்தக் காரில் இருந்த கோபி, கணேஷ், யுவநாதன், சக்திவேல், கோபிநாத் ஆகிய 4 பேரை கைது செய்து, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.