சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல் உள்ளது கருணாநிதியின் மறைவு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திமுக கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சென்னை மெரினாவில் மக்கள் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் மக்கள் விடிய விடிய அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் கருணாநதியின் சமாதியில் கவிஞர் வைரமுத்து இன்று காலை தனது மகன்கள் மதன் கார்க்கி, கபிலனுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அவர், பால் தெளித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இலக்கியம், சொற்பொழிவு உள்ளிட்டவைகளில் கருணாநிதி வாழ்ந்து கொண்டிருக்கிறார். தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடமையாக கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன்.
சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல் உள்ளது கருணாநிதியின் மறைவு என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







