இயற்கையின் கோரத் தாண்டவம்: 2007ம் ஆண்டுக்குப் பிறகு வால்பாறை சந்தித்த முதல் மிகக் கனமழை

கேரளாவில் பெய்து வரும் மழையை, இயற்கை ஏதோ ஒரு காரணத்தால் தற்போது மிருகத்தனமான குணத்துடன் கோரத் தாண்டவம் ஆடி வருவதாகவே பார்க்க முடிகிறது.
இயற்கையின் கோரத் தாண்டவம்: 2007ம் ஆண்டுக்குப் பிறகு வால்பாறை சந்தித்த முதல் மிகக் கனமழை
Published on
Updated on
2 min read

சென்னை: கேரளாவில் பெய்து வரும் மழையை, இயற்கை ஏதோ ஒரு காரணத்தால் தற்போது மிருகத்தனமான குணத்துடன் கோரத் தாண்டவம் ஆடி வருவதாகவே பார்க்க முடிகிறது.

தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களிலும் கன மழை நீடிக்கிறது. 

தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதே போல அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இயற்கை தற்போது மிருகக் குணத்தோடு இருக்கிறது. வால்பாறை மற்றும்  இடுக்கியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இது பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நிலைமை மேலும் மேலும் மோசமாகிறது.

வால்பாறையில் இதுபோல கடந்த 2007ம் ஆண்டுதான் மிகக் கன மழை பதிவானது. 

இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழையின் அளவானது..

கோவை (வால்பாறை பகுதி)

சோலையாறு அணை - 410 மி.மீ.
சின்னக்கல்லாறு - 298 மி.மீ.
பெரியகல்லாறு - 298 மி.மீ.
வால்பாறை தாலுகா அலுவலகம் - 190 மி.மீ.
சோலையாறு நகர் - 150 மி.மீ.
கடம்பாறை - 78 மி.மீ.
பொள்ளாச்சி - 70 மி.மீ.



நீலகிரி 
அப்பர் பவானி - 197 மி.மீ.
தேவாலா - 171 மி.மீ.
நடுவட்டம் - 116 மி.மீ.
பைகாரா - 91 மி.மீ.

நெல்லை 
அடவிநயினார் - 110 மி.மீ.
செங்கோட்டை - 89 மி.மீ.
பாபநாசம் - 58
மணிமுத்தாறு - 57 மி.மீ.
சேர்வலாறு - 50 மி.மீ.

தேனி 
பெரியாறு அணை - 123 மி.மீ.
கூடலூர் - 50 மி.மீ.
மணலாறு - 40 மி.மீ.

கன்னியாகுமரி 
அப்பர் கொடையாறு - 93 மி.மீ.
குழித்துறை - 50 மி.மீ.
பேச்சிப்பாறை - 50 மி.மீ.

கேரளா 
பீர்மேடு, இடுக்கி - 349 மி.மீ.
பொன்னனி, மலப்புரம் - 272 மி.மீ.
வடகரா, கோழிக்கோடு - 259 மி.மீ.
வெள்ளனிகரா, திரிசூர் - 254 மி.மீ.
மன்னார்காடு, பாலக்காடு - 240 மி.மீ.
திரிசூர், திரிசூர் - 237 மி.மீ.
அலத்தூர், பாலக்காடு - 236 மி.மீ மழை பெய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.