
கேரள வெள்ளப் பாதிப்புக்கு நடிகர் விஷால் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் வீடுகளை இழந்துள்ளனர். வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தை சந்தித்து வரும் கேரள மக்களுக்கு தமிழ்த் திரை உலகம் உதவி வருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, நடிகை ரோஹிணி ஆகியோர் ஏற்கெனவே நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அளித்துள்ளார். மேலும், திரைத் துறையினரும், ரசிகர்களும் கேரள மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






