சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ரூ.1,264 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை 45 மாதங்களில் நிர்மாணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை இரவு தெரிவித்தாவது:
தமிழகத்தில் உள்ள மதுரையில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டிலும், தெலங்கானா மாநிலத்தில் பீபீ நகரில் ரூ.1,028 கோடி மதிப்பீட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலனுக்கான பரிசாகும்.
பிரதமர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (பிஎம்எஸ்எஸ்ஒய்) கீழ் புதிதாக மதுரையில் அமையவுள்ள மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும். இதில் அவசர கால சிகிச்சை, காய சிகிச்சை, ஆயுஷ் மருத்துவ சிகிச்சை, தனியார் படுக்கை, ஐசியு சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை உள்ளிட்டவை அடங்கும்.
மேலும், 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள் இடம் பெறும். இவை முழுமையான செயல்பாட்டுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையாக இருக்கும். மேலும், ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ஒரு நாளைக்கு 1500 புறநோயாளிகளுக்கும், உள்நோயாளி பிரிவில் மாதத்துக்கு 1,000 பேருக்கும் சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்தப்படும்.
தற்போது நாட்டில் 11 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனையானது வேலைவாய்ப்பு, கவனிப்பு, சிகிச்சை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்த மருத்துவமனையுடன் மருத்துவக் கல்லூரியும், அதில் ஆயுஷ் பிரிவுக்கு தனிக் கட்டடம், அரங்கம், இரவு நேரத் தங்கும் குடில், விருந்தினர் இல்லம், விடுதிகள், குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


