மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், புதுவை உள்ளிட்ட நான்கு மாநில அரசுகளின் ஆலோசனைக் கூட்டத்தை 10 நாள்களுக்குள் நடத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்ததாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
புதுதில்லிக்கு கடந்த 17ஆம் தேதி சென்றிருந்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினேன். அமைச்சர் அருண் ஜேட்லியிடம் புதுவையை 15-ஆவது நிதிக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும், அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதுவைக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
மேலும், அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபோது, கஜா புயலால் புதுவை மாநிலத்தில் காரைக்கால் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, கஜா புயல் பாதிப்பு விவரங்களை ஆய்வு செய்த மத்தியக் குழு சில நாள்களுக்கு முன்புதான் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதை ஆய்வு செய்து உடனடியாக நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்தார்.
மேலும், புதுவையின் அனுமதியின்றி மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான தடையில்லாச் சான்று கர்நாடக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுவை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அமைச்சரிடம் அளித்தேன்.
அதைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி, இன்னும் 10 நாள்களுக்குள் கர்நாடகம், தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 4 மாநில அரசுகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். மேலும், புதுவையில் சாகர்மாலா திட்ட வளர்ச்சிப் பணிகள், புதுச்சேரி துறைமுகப் பணி உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதித்தோம் என்றார் முதல்வர் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



