தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை

News image
Updated On :23 டிசம்பர் 2018, 2:22 pm

DIN


சென்னை: இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக, நாகை மாவட்டம் அணைக்காரன்சத்திரத்தில் 4 செ.மீ, கடலூர் மாவட்டம் சிதம்பரம், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.