இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திமுக -காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை:  தமிழிசை சௌந்தரராஜன்

திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

News image
Updated On :26 டிசம்பர் 2018, 2:39 am IST


திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் - திமுக கூட்டணி இணைந்து எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதையும், அவர்களது தோல்வியான ஆட்சி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறுவோம். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதில் தோல்வியடைந்த தால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. 
136 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளதால் திரைப்பட டிக்கெட் விலை குறையும் இதற்கு வடமாநில திரைத் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால், இங்கு நன்றி தெரிவிக்க யாரும் இல்லை. 
விவசாயத்துக்கு எதிராகவே மத்திய அரசின் திட்டங்கள் இருப்பதாக கூறுவது தவறான கருத்து. 
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அவை நிறுத்தப்பட்டன. இதேபோல உயர்மின் கோபுரங்கள் திட்டத்துக்கு விவசாயிகள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அத்திட்டமும் நிறைவேற்றப்படாது. இவ் விவகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும். 
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கர்நாடக மாநிலத்துக்கே நேரில் சென்று அணை கட்டக் கூடாது என ஏன் இதுவரை கூறவில்லை? மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மு.க.ஸ்டாலின் பேசினாரா என்பதையும், அதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.