சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அமெரிக்கா, கனடாவுக்கு திருவள்ளுவர் சிலைகள் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் அனுப்பியது

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு திருவள்ளுவர் சிலைகள் சென்னையிலிருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:48 pm

DIN

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு திருவள்ளுவர் சிலைகள் சென்னையிலிருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. 
தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் இயங்கி வரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், தனது தமிழ்ப் பணிகளின் ஓர் அங்கமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷம் செய்து வருகிறார். 
தற்போது கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இந்தச் சிலைகளை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விஜயராகவன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கோ.பெரியண்ணன், கவிஞர் மறவன்புலவு சச்சிதானந்தன், ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர், பேராசிரியர் உலகநாயகி பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைகள் வெளிநாடுகளில் நிறுவப்படுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவியர் மத்தியில் விளக்கிப் பேசினர். 
இதையடுத்து வி.ஜி.சந்தோஷம் செய்தியாளர்களிடம் கூறியது: உலகை தமிழால் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படுகின்றன. கனடா டொராண்டோவில் வரும் மே 5-ஆம் தேதி அங்குள்ள ஸ்காபரே சைவ மண்டபத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 32-ஆவது திருவள்ளுவர் சிலையை கனடா அமைச்சர்கள் முன்னிலையில் டொராண்டோ மேயர் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் இலங்கை அமைச்சர், 60-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்கின்றனர். 
இதைத் தொடர்ந்து 33-ஆவது சிலையை நியூயார்க்கில் உள்ள மிடில் வில்லேஜ் தமிழ்க் கோயில் வளாகத்தில் அமையவுள்ள 33-ஆவது திருவள்ளுவர் சிலையை நான் திறந்து வைக்கவுள்ளேன். இந்த இரு சிலைகளும் கப்பல் மூலம் டொராண்டோ, நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.