

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருவதால், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, குரோம்பேட்டை பேருந்து பணிமனையில் வியாழன் அன்று நடைபெற்று வந்தது. இந்த பேச்சு வார்த்தையில் உறுதியான முடிவு எடுக்கப்படாமல் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
இதன் காரணமாக கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.