பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சென்டாய் கட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்ட இலக்குகள், பருவ நிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் இலக்குகள், தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம், ஆசிய நாடுகள் மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட செயல் திட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து தொலைநோக்குத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர்களால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடு, அதனைத் தணிப்பதற்கான அணுகுமுறைகள், நிர்வாகக் கட்டமைப்பு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை, இழப்பீடு வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018-2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!






