அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திமுக தலைவர் கருணாநிதியை இன்று இரவு சந்திக்கிறார் ரஜினிகாந்த்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய் இரவு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2018, 1:05 pm

DIN

சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய் இரவு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவரும் திமுக தலைவர் கருணாநிதி, தற்பொழுது  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியை சந்திக்க, புது தில்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் செவ்வாய் மாலை சென்னை வந்த காங்கிரஸ் ராகுல் காந்தி, விமான நிலையத்தில் இருந்து நேராக காவேரி மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

அத்துடன் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டு, திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய் இரவு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய் இரவு 08.45 மணிக்கு காவேரி மருத்துவமனைக்குச் சென்று, கருணாநிதியின் நேராக சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.