எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கும் தொலைக்காட்சி வசதி செய்து தர வேண்டும் என்று பேரவைத் தலைவர் தனபாலுடன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டப்பேரவையில் துரைமுருகன் பேசியது: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை அதிகாரிகள் கேட்பதற்காக தொலைக்காட்சி வசதி செய்து கொடுத்திருப்பதாகக் கூறினீர்கள். உங்களின் உத்தரவின்படிதான் இது நடந்துள்ளது. உங்கள் அதிகாரத்தில் தலையிட விரும்பவில்லை. இந்த வசதியை முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் செய்து தர வேண்டும் என்றார்.
பேரவைத் தலைவர் தனபால்: அதிகாரிகள் அனைவரும் அமர்வதற்கு இங்கு போதுமான இடம் இல்லை. அமைச்சர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு உடனுக்கு உடன் பதில் எழுதித் தர வேண்டும் என்பதற்காக இந்த வசதியைச் செய்து கொடுத்துள்ளேன்.
துரைமுருகன்: அதிகாரிகளுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, முதல்வருக்குக் கூட கொடுக்காமல் இருப்பது சரியல்ல. எல்லோருடைய அறையும் உங்களின் அதிகாரத்துக்குள்தான் வருகிறது. அதனால், தொலைக்காட்சியில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபால்: சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்புவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த வசதியைச் செய்து கொடுத்துள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










