/

ஆசிரியர் பகவான் வெளியகரம் பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித் துறை அனுமதி

ஆசிரியர் பகவான் வெளியகரம் பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

ஆசிரியர் பகவான் வெளியகரம் பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பகவான்(28). இவர், பணிநிரவல் காரணமாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

ஆனால் ஆங்கில ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பள்ளியை விட்டு வெளியே செல்லாதவாறு ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு கதறியும் அழுதனர். இதனால், அவரின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் ஆசிரியர் பகவான் வெளியகரம் பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.