ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

அறிவுத்திறன் குறைபாடுடையோர் பிரச்னையை சமூக அக்கறையுடன் அணுக வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஆட்டிசம்' என்றழைக்கப்படும் அறிவுத் திறன் குறைபாடுடையோரின் பிரச்னையை சமூக அக்கறையுடன் அணுகி தீர்வு காண வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டார்.

News image

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்ற அறிவுத் திறன் குறைபாடு குறித்த தேசியக் கருத்தரங்கில், விழா மலரை வெளியிடும் (இடமிருந்து) துணை வேந்தர் சந்தீப் சன்ஷெட்டி,

Updated On :29 ஜூன் 2018, 2:45 am IST

ஆட்டிசம்' என்றழைக்கப்படும் அறிவுத் திறன் குறைபாடுடையோரின் பிரச்னையை சமூக அக்கறையுடன் அணுகி தீர்வு காண வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவுத் திறன் குறைபாடு குறித்த தேசியக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
அறிவுத்திறன் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி பிறக்கும் 160 குழந்தைகளில் ஒரு குழந்தை அறிவுத் திறன் குறைபாடுடன் பிறக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பிறக்கும் 68 குழந்தைகளில் ஒரு குழந்தை அறிவுத் திறன் குறைபாடு பிரச்னையுடன் பிறக்கிறது.
உலக அளவில் 7 கோடி குழந்தைகளும், நாட்டில் ஒரு கோடி குழந்தைகளும் அறிவுத் திறன் குறைபாடுடன் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சு, விளையாட்டு, சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிப்பதன் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்த முடியும். மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள், நடவடிக்கைகள் மூலம் உறுதுணையாக உள்ளன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன. அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து, உரிய பயிற்சி, சிகிச்சை, பராமரிப்பு, கண்காணிப்பு ஆகியன அளிப்பதற்கு பெற்றோரும், மருத்துவர்களும் கூடுதல் அக்கறை செலுத்த முன்வர வேண்டும் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
எஸ்.ஆர்.எம்.வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், தலைவர் பி. சத்யநாராயணன், துணைவேந்தர் சந்தீப் சன்ஷெட்டி, பதிவாளர் என்.சேதுராமன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.