நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணைத் தலைவர் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் வியாழக்கிழமை நேரடி

News image

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற இடங்களை வியாழக்கிழமை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய துணைத் தலைவர் எல். முருகன்.

Updated On :30 ஜனவரி 2024, 9:35 pm IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் வியாழக்கிழமை நேரடி விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து சனிக்கிழமை (ஜூன் 30) ஆம் தேதி வரை விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்படும் என ஆணைய துணைத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் நால்வர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அந்த ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் தலைமையிலான குழுவினர் விசாரணையை வியாழக்கிழமை தொடங்கினர். தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் குழுவினர் விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வசேகர், கந்தையா, காளியப்பன் மற்றும் உசிலம்பட்டி ஜெயராமன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர், போராட்டத்தின்போது கலவரம் நிகழ்ந்த இடம், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை சாலை, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, விவிடி சிக்னல், 3 ஆவது மைல், பனிமய மாதா கோயில் பகுதி, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளை ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் நேரடியாகப் பார்வையிட்டார். அவரிடம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். சனிக்கிழமை (ஜூன் 30) வரை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணைய துணைத் தலைவர் எல். முருகன் கூறுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த உயர் அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமையும் (ஜூன் 29), தற்போது பணியில் இருப்பவர்களிடம் சனிக்கிழமையும் (ஜூன் 30) விசாரணை நடத்தப்படும். தொடர்ந்து விசாரணை அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.