காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரக் காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான அவகாசம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், திமுக அவசரச் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூட உள்ளது.
கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில், ஆலோசிக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


