தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாடாதீர்கள்: கமல் பேட்டி

காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாடாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2018, 9:50 am


சென்னை: காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாடாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. வலுவான உறுதி இருந்தால், மத்திய அரசு நினைத்தால் செய்யலாம்.

முதல்வரை சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளேன். நேரம் வழங்கப்பட்டால், முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்துமாறு கூறுவேன். காவிரி விவகாரத்துக்காக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும்.  தேவைப்பட்டால் தில்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அழுத்தம் கொடுப்பேன் என்று கூறினார்.

மேலும், 2 மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை. அதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்காக விளையாட வேண்டாம் என்று கமல் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், ஏப்ரல் 1ம் தேதி வரும் ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடியில் மக்களின் போராட்டத்தில் பங்கேற்கிறேன் என்றார்.

செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கமல், நாங்கள் சொல்வதை எல்லாம் அரசு கேட்கிறதா என்ன? என்று கேட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.