அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காவிரி விவகாரம்: மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 15 இளைஞர்கள் கைது! 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 15  இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2018, 12:08 pm

DIN

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 15  இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.  காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் விடியோ பதிவு சனிக்கிழமை மாலை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

தொடர் விடுமுறை நாட்கள் உள்ள காரணத்தால் மெரினா கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் அங்கு விரைந்த காவல்துறையினர்,, தேடுதல் வேட்டை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களைக் கைது செய்த்தனர்.    

அப்போது கைதான் இளைஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் ஐ.சி.எப் பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு எந்த விதமான பின்னணியும் கிடையாது. எந்த அரசியல் கட்சியினையும் சார்ந்தவன் இல்லை. சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமே என்பதே எனது ஒற்றைக் கோரிக்கை. இதற்காக உண்ணாவிரதம் என்பதெல்லாம் பயனற்றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாப்பிடாமல் இருந்து என்ன பலன்? கடந்த 40 நாட்களாக ஒன்றும் செய்யாதவர்கள் இப்பொது மட்டும் என்ன செய்து விட போகிறார்கள்? 

இது யாரும் ஏற்பாடு செய்யாமல் தானாக உணர்வினால் எழுந்த போராட்டம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் போராட்டத்தினைத் தொடர்ந்து அங்கு அதிகளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பட்டிணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடைபெறுவதுடன், சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ள இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் விளைவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.