கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கஜா புயலால் சென்னைக்கு நேரடியாக பாதிப்பு இல்லை; மழை பெய்யும்: பாலச்சந்திரன்

கஜா புயல் காரணமாக சென்னைக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 நவம்பர் 2018, 10:35 am

DIN


சென்னை: கஜா புயல் காரணமாக சென்னைக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் கஜா புயல் தற்பொழுது நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 790 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 15ம் தேதி பிற்பகலில் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தற்போதைய நிலவரப்படி இன்று காலை முதல் புயல் கரையை கடக்கும் வரை கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 - 90 கி.மீ. வேகத்திலும் சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.

இந்த மாவட்டங்களில் 15ம் தேதி பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் 15ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை 15, 16, 17ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கஜா புயலால் சென்னைக்கு நேரடியாக பாதிப்பு இருக்காது. ஆனால் மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.