கோவையில் வைரஸ், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு இருவர் உயிரிழந்தனர்.
கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (62). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் சாவு: கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் வசித்து வந்தவர் கண்ணன் (44). இவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதை உறுதி செய்த வட்டார சுகாதார அலுவலர் ராமராஜ், அவருக்கு மருந்துகள், அவரது குடும்பத்தினருக்கு சுகாதார அறிவுரைகளை வழங்கினர்.
இந்நிலையில், பன்றிக் காய்ச்சல் அதிகமானதால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வைரஸ், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதுமையைத் தடுக்க வழி இருக்கா? புதிய ஆய்வு சொல்லும் சுவாரசிய தகவல்! | Ariviyal Aayiram

பிரதமருக்கு யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை: அமித்ஷா பேச்சு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டும்: சீமான்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


