கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2018, 8:57 am

DIN


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நேற்று தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த  தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே தென் மேற்கு பகுதியில் நீடித்து வருகிறது. இது மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து நிலை கொள்ளும். அதே இடத்தில் கடற்கரையோரப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரயில் பரவலாக பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிகக் கன மழையும் பெய்யும். குறிப்பாக, காஞ்சிபுரம், புதுவை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 செ.மீ. மழையும், மணிமுத்தாறு பகுதியில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களைப் பொறுத்தவரை இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.