திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

சென்னை: கிணற்றில் விழுந்த மூதாட்டி 12 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்பு

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வறண்ட கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் பரிதவித்த நிலையில் காலையில் மீட்கப்பட்டுள்ளார்.

News image

file photo

Updated On :28 நவம்பர் 2018, 9:51 am


சென்னை: சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வறண்ட கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் பரிதவித்த நிலையில் காலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சரஸ்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மூதாட்டி பஜனைக் கோயில் சாலையில் தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இல்லாத நிலையில் அவரது கணவர் உயிரிழந்து விட்டதால் கடந்த சில ஆண்டுகளாக அவர் தனியாக வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் வீட்டுக்கு அருகே இருந்த தரைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதை யாரும் பார்க்காததால் அவருக்கு உடனடியாக உதவி கிடைக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அவருக்கு உணவு கொண்டு வந்த பக்கத்து வீட்டினர், அவரைக் காணாமல் தேடியபோது கிணற்றில் விழுந்து கிடந்ததை பார்த்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டனர். அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், தைரியத்தோடு மனம் தளராமல் இருந்ததே அவர் உயிர் பிழைத்ததற்குக் காரணம் என்கிறார்கள்.

இரவு முழுவதும் கிணற்றில் தத்தளித்த மூதாட்டியின் தைரியத்தை அக்கம் பக்கத்தினர் பாராட்டுகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.