பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முத்திரை பதித்தோருக்கு இன்று ஊக்கத் தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த தமிழர்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில்

Published On :


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த தமிழர்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்குகிறார். 
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் ஸ்குவாஷ், மேஜைப்பந்து, ஓட்டப் போட்டி, ஹாக்கி என பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.
வெள்ளி-வெண்கலம்: சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, வெள்ளி வென்றால் ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்வோருக்கு ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று உயரிய ஊக்கத் தொகை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கான உயரிய ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 14) வழங்கவுள்ளார். 
மணி மண்டபம்: ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் கடலூரில் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக மணிமண்டபத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். கடலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.