உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம்: விஜயகாந்த்

தேமுதிக 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் சூளுரைத்துள்ளார்.

கோப்புப்படம்

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST


தேமுதிக 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் சூளுரைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேமுதிக தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமையன்று 14-ஆவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்தில் தீர்க்கப்படாத பல பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், வறுமை கோட்டுக்குக் கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து பாடுபடும். வரப்போகும் தேர்தல்களை உறுதியோடு எதிர்கொண்டு, தேமுதிக தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி என்பதை உணர்த்தும்.
எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதியை இந்த நன்நாளில் அனைவரும் ஏற்போம். உண்மையான கொள்கைக்காக, லட்சியத்துக்காக இந்த இயக்கத்தில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுடன் எனது பயணம் என்றும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.