தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

காசி விஸ்வநாதர் கோயிலில் வீசப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை

சேலம் காசி விஸ்வநாதர் கோயிலில் அர்த்தநாரீஸ்வர சுவாமி சிலையை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார்

மர்ம நபர்களால் வீசப்பட்ட சிலை. 

Published On :


சேலம் காசி விஸ்வநாதர் கோயிலில் அர்த்தநாரீஸ்வர சுவாமி சிலையை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மணல் மார்க்கெட் பகுதியில் பழைமையான காசி விஸ்வநாதர் கோயிலில் நடராஜர் சன்னிதி அருகே காகிதத்தால் சுற்றப்பட்ட பொருள் புதன்கிழமை நள்ளிரவில் கிடந்தது.
இதைப் பார்த்த காவலாளி காகிதத்தை அகற்றி பார்த்தபோது, அர்த்தநாரீஸ்வரர் சிலை இருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு வியாழக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டார். இதில், அர்த்தநாரீஸ்வரர் சிலை 2 கிலோ 178 கிராம் இருந்தது என தெரிகிறது. 
இதுதொடர்பாக மாநகர போலீஸாரும், சிபிசிஐடி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக நகரக் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 5 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
அதேவேளையில் இந்தச் சிலை எந்தக் காலத்தைச் சேர்ந்தது, ஐம்பொன் சிலையா என்பது குறித்து அறிவதற்காக தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு தெரிவித்தார்.
இதனிடையே தமிழத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிலை கடத்தலில் தொடர்புடைய நபர்கள் யாராவது சிலையை வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.