புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நாகர்கோவிலில் தடையை மீறி ஊர்வலம்: 4 எம்எல்ஏக்கள் உள்பட 500 பேர் மீது வழக்கு

நாகர்கோவிலில் தடையை மீறி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published On :


நாகர்கோவிலில் தடையை மீறி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த ஊழலைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குமரி மேற்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ரஃபேல் போர் விமான ஊழலைக் கண்டிப்பதாகக் கூறி, நாகர்கோவிலில் புதன்கிழமை மாலை பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து தொடங்கிய பேரணி, நீதிமன்ற சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலையை அடைந்தது. அங்கு ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதரணி, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே, தடையை மீறி பேரணி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 500 பேர் மீது கோட்டார் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.