ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

சென்னையில் போராட்டம் நடத்திய திருமாவளவன் உட்பட 500 பேர் மீது வழக்கு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காவல்துறை அனுமதியின்றி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

Citizenship Act

Updated On :20 டிசம்பர் 2019, 9:30 am

DIN


சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காவல்துறை அனுமதியின்றி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், நடிகர் சித்தார்த், பாடகர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உரையாற்றினர்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பாளர்கள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்தனர். பிறகு, காவல்துறை அனுமதி இல்லாமல் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை 5 மணியளவில், வள்ளுவர்கோட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிறகு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.