விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, சிவகாசியில் கடந்த 3 நாள்களாக பட்டாசுத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நிறைவடைந்தது.
பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் கடந்த 100 நாள்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மூடப்பட்டப் பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும். வேலை இழந்த பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு சார்பில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாள்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் மூன்றாம் நாளாக புதன்கிழமையும் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள மைதானத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி பாலசுப்பிரமணியம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி இசை மதிவாணன், பட்டாசு விற்பனையாளர்கள் ரவி, ஷேக்மீரா, பாமக நிர்வாகி ஜூலி, மக்கள் பாதை அமைப்பு நிர்வாகி ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என். இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைதம்பி, பட்டாசு தயாரிப்பாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சென்னையை வென்ற நாா்த்ஈஸ்ட்!
விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

